ரூ. 2 கோடி கடன் தொகையை வங்கிக்கு திருப்பி செலுத்தாததால் நடிகர் ராம்பி - நிரோஷா தம்பதியரின் வீடு ஏலத்திற்கு வந்துள்ளது. சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராம்கி, ஏராளமான சினிமாக்களில் நடித்து பிரபலமானார். செந்தூரப்பூவே படத்தில் நடித்தபோது, அப்படத்தில் நாயகியாக நடித்த நிரோஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் சம்பாதித்துக் கொண்டிருந்தபோது, ராம்கி வங்கியில் கடன் வாங்கி சென்னை ஜெமினி பாலம் அருகில் உள்ள ஜெமினி பார்சன் அபார்ட்மெண்ட்டில் ஒரு வீடு வாங்கினார். பின்னர் அந்த வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெற்று கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினார். அந்த தொழில் நஷ்டத்தில் முடிந்தது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த அவர்களால் கடனை கட்ட முடியவில்லை. கடனுக்கான வட்டியும் உயர்ந்து விட்டது. இந்நிலையில், கடன்தொகை மற்றும் வட்டியை செலுத்ததால் அவர்களின் வீடு ஏலத்திற்கு வருவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் கூட்டாக அறிவித்துள்ளன. மொத்தம் ரூ.2 கோடி தொகைக்காக ராம்கி - நிரோஷா வசித்து வரும் ஜெமினி பார்சன் அபார்ட்மென்ட் இ பிளாக்கில் உள்ள வீடு, அடுத்த மாதம் 19ம்தேதி மதியம் 12 மணிக்கு ஏலம் விடப்படுவதாக வங்கிகள் அறிவித்துள்ளன.