இந்த சமூகம் நடிகைகள் பற்றி வைத்திருக்கும் அபிப்ராயமெல்லாம் ரொம்ப தப்பா இருக்கிறது. அந்த களங்கத்தை துடைப்பதற்காகத்தான், "ஒரு நடிகையின் வாக்குமூலம்" என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன், என்று டைரக்டர் ராஜ்கிருஷ்ணா கூறியுள்ளார். தான் இயக்கி வரும் புதிய படமான "ஒரு நடிகையின் வாக்குமூலம்" படம் பற்றி ராஜ்கிருஷ்ணா அளித்துள்ள பேட்டியில், நடிகையை இந்த சமுதாயம் எப்படி எப்படியோ பார்க்குது. ஆனால் அவங்களுக்கு இருக்கிற கஷ்டங்கள், வேதனைகள் இவற்றையெல்லாம் ஏன் கவனிக்க மாட்டேங்குது? ஒரு நடிகையை சுற்றியிருக்கிறவங்க எல்லாருமே சந்தோஷமா இருக்காங்க. ஆனால் அந்த நடிகை அப்படி இருக்காளான்னு கேட்டா, நான் இல்லைன்னுதான் சொல்வேன். மற்றவங்களுக்காக தன்னையே வருத்திக்கிற அந்த நடிகையை பற்றி இந்த சமுதாயம் வச்சுருக்கிற அபிப்ராயம் ரொம்ப தப்பாயிருக்கு. அந்த களங்கத்தை போக்குறதுக்காகத்தான் இந்த படத்தை இயக்குறேன், என்று கூறியுள்ளார்.
படத்தில் நடிகை சோனியா அகர்வால்தான் வாக்குமூலம் கொடுக்கும் நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். பூஜைபோட்ட நாளில் அம்மணியின் தன் கவர்ச்சியான மேனியை காட்டி ஆடிக் கொண்டிருந்தார். எப்படியும் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுக்க வேண்டும், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு, படு கிளாமராக ஆடத்தயாராகி விட்டார்.ஆனால் டைரக்டரோ... நடிகைகளே கவலைப்படாத விஷயங்களை அலசி, ஆராய்ந்து படமாக்குவது எப்படி ஒரு நடிகையின் வாக்குமூலமா இருக்க முடியும்?