Sunday, 3 July 2011
சென்னையில் இன்று டைரக்டர் செல்வராகவன் திருமணம் நடந்தது.
Sunday, July 03, 2011
பிரபல சினிமா இயக்குனர் செல்வராகவன். இவர் “காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை” போன்ற படங்களை டைரக்டு செய்துள்ளார். நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார்.
செல்வராகவனுக்கும், முன்னாள் அட்வகேட் ஜெனரல் ராமன் மகள் கீதாஞ்சலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் இன்று காலை கிண்டியில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் நடந்தது. இது காதல் திருமணமாகும்.
மணமகள் கீதாஞ்சலி அரக்கு நிறத்தில் பட்டு சேலை அணிந்திருந்தார். செல்வராகவன் பட்டு வேட்டி, ஜிப்பா அணிந்திருந்தார். திருமண சடங்குகள் காலை 8.50 மணிக்கு தொடங்கியது. 9.15 மணிக்கு வைதீக முறைப்படி புரோகிதர்கள் மந்திரம் ஓத கீதாஞ்சலிக்கு செல்வராகவன் தாலி கட்டினார். அப்போது கூடியிருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.
பட அதிபர் ஏ.வி.எம். சரவணன், தொழில் அதிபர், எம்.ஏ.எம். ராமசாமி, டைரக்டர் மணிரத்னம், சுகாசினி, தயாரிப்பாளர்கள் ராம்குமார், சத்யஜோதி தியாகராஜன், நடிகர் சின்னி ஜெயந்த், அரவிந்தசாமி, டைரக்டர் அழகம்பெருமாள், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், போலீஸ் அதிகாரிகள் லத்திகா சரண், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.
திருமணத்துக்கு வந்தவர்களை செல்வராகவனின் தந்தை டைரக்டர் கஸ்தூரி ராஜா, நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் வரவேற்றனர்.