திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கொண்டாட ஆஸ்திரியாவுக்கு பறந்துவிட்டது, கார்த்தி-ரஞ்சனி ஜோடி. ஐரோப்பாவில் உள்ள ஆஸ்திரியா அழகிய மலைகள், கண்கவர் ஏரிகள், அதிவேக நதிகள், அடர்ந்த காடுகளுக்குப் பெயர் பெற்றது. ஆபத்தில்லாத அழகிய நாடு. கல்யாணத்துக்கு முன்பே இங்குதான் ஹனிமூன் போக வேண்டும் என்று இருவரும் பேசி முடிவெடுத்திருந்தார்களாம். திருமணம், அதனைத் தொடர்ந்த வரவேற்பை அடுத்து, உடனடியாக ஆஸ்திரியா பறந்து விட்டது இந்த ஜோடி. ஆஸ்திரியாவில் இருந்து 20ம்தேதி சென்னை திரும்பும் கார்த்தி, அதன்பிறகு சகுனி சூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.