காதல் தற்கொலைகள் எல்லாம் நிஜமாகவே தற்கொலைதானா? அல்லது கொலையா? என்ற கேள்விக்கு விளக்கம் சொல்ல வரும் புதிய படம் "ஒத்திகை". டைரக்டர் ஏ.எம்.பாஸ்கர் இயக்கி, தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோவாக நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அர்ச்சனா சர்மா நடிக்கிறார்.
புதிய படம் குறித்து டைரக்டர் பாஸ்கர் கூறுகையில், மலை பிரதேசங்களில் அமைந்திருக்கிற தற்கொலை பாறைகளுக்கு வாயிருந்தால் ஓராயிரம் கதைகளை சொல்லும். இதில் பாதி கதைகள் காதல் கதைகளாகதான் இருக்கும். மலை பிரதேசங்களில் நடக்கும் இளம் ஜோடிகளின் தற்கொலை எல்லாம் நிஜமாகவே தற்கொலைதானா என்ற கேள்வியை எழுப்புவதுதான் ஒத்திகை படத்தின் அழுத்தமான கதை. நான் சேகரித்த நிஜ தகவல்களின் அடிப்படையில் இந்த கதையை அமைத்திருக்கிறேன். சமுதாயம் தற்கொலை என்று நினைத்து கவலைப்படும் பல சாவுகள், தற்கொலையல்ல, கொலை என்ற அதிர்ச்சியை என்னுடைய ஒத்திகை கிளப்பும், என்றார்.நல்ல கதையா இருந்தா மட்டும்தான் மற்றவங்களுக்கு கால்ஷீட், இல்லன்னா... நானே இயக்கி நடிப்பேன் என்று அடம்பிடிக்கும், நடிகர் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால்... படத்தில் ஏதோ விஷயம் இருக்கும் என்பது புரிகிறது.