Wednesday, May 11, 2011
ரஜினிக்கு இரு தடவை உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். முதலில் அஜீரண கோளாறு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். அதற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இதையடுத்து நேற்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சென்னையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் வறுத்தெடுக்கிறது. எனவே குளிர் பிரதேசங்களுக்கு சென்று மருத்துவ ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்றால் ரசிகர்கள் தொல்லை ஏற்படும். சுதந்திரமாக நடமாட முடியாது. எனவே வெளிநாட்டு குளிர்பிரதேசங்களுக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு அவர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தூதரகங்களில் விசா பெறுவதற்கான பணிகள் நடக்கின்றன. வெளிநாடுகளில் ஒரு மாதம் வரை ஓய்வெடுப்பார் என தெரிகிறது.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ரஜினி பூரண குணமானதும் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளனர்.