
அஜீத்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தீனா படத்தையும், எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தையும் கொடுத்து தங்களது திரை பயணத்தை தொடங்கினார். இரண்டு படங்களுமே அஜீத்திற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்கள். அதிலும் குறிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா படம் அஜீத்தை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது. மேலும் அஜீத்தை தல என்று செல்லமாக அழைக்க வைத்ததும் தீனா படம் தான். முதல்படத்திலேயே ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து பிரபல டைரக்டர்கள் வரிசையில் சேர்ந்தனர் எஸ்.ஜே.சூர்யாவும், ஏ.ஆர்.முருகதாஸூம்.
இந்நிலையில் மீண்டும் அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்க முருகதாஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவும் கடுமையாக போட்டி போடுவதாக தெரிகிறது. இருவரும் ஒரு கதையை ரெடி பண்ணி அஜீத்திடம் காண்பித்துள்ளனர். அதில் முருகதாஸின் கதை பிடித்து போக அவருக்கு ஓ.கே., சொன்னதாக தெரிகிறது. அதேசமயம் எஸ்.ஜே.சூர்யாவையும் ஒதுக்காமல் தங்களுடைய படத்திலும் நடிப்பதாக கூறியிருக்கிறார் அஜீத். தற்போது அஜீத் மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறார். அதனைத்தொடர்ந்து சக்ரி டோலட்டி இயக்கும் பில்லா-2வில் நடிக்கிறார். பில்லா-2விற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிப்பார் எனத் தெரிகிறது.