Thursday, May 05, 2011
தென்னிந்திய படங்களான 'அந்நியன்', 'உன்னாலே உன்னாலே' போன்ற படங்களில் நடித்த சதாவிற்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் வந்ததால் அதை நோக்கி நகர்ந்தார்.பாலிவுட் படங்களில் நடித்தவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனதால் ஏமாற்றம் அடைந்தாராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் நடிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளார் சதா.
பாலிவுட் கனவு தகர்ந்து விட்டதாக சோகத்துடன் தளர்ந்தவர் தென்னிந்திய பட உலகம் தான் இனி உற்சாகம் தர முடியும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
புது நாயகன் நடிக்கும் படம், சிறிய நிதியில் எடுக்கப்பட்ட படம் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்தாலே நடிக்க தயாராக இருந்துள்ளேன்.
சில படங்கள் பண சிக்கலில் தள்ளாடும். எப்போது படம் வெளியாகும் என்று உறுதியாக எதுவும் தெரியாமல் போகும். அதனால், படத்தில் நடிக்க இறங்கும் முன் பல விடயங்களை கவனிப்பேன்.
பெரும்பாலும் வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்க்க முயற்சித்துள்ளேன். பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்.
பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை வளர்த்துக்கொள்ளாமல் நடித்து கொடுப்பேன். அதனால் எனக்கு ஏமாற்றம் மிஞ்ச வாய்ப்பில்லை என்று சதா கூறியுள்ளாராம்.