போற போக்கைப் பார்த்தால் சினிமாக்காரர்கள் எல்லோரும் அரசியல்வாதிகளை மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இராம.நாராயணன், வி.சி.குகநாதன், குஷ்பு உள்ளிட்டோர் தாங்கள் வகித்து வந்த சங்க பதவிகளில் இருந்து விலகினார்கள். இயக்குனர்கள் சங்கத்தைப் பொறுத்தவரை காலம் காலமாக போட்டியின்றி தலைவர்கள் தேர்தெடுக்கப்பட்டு வந்த நிலை மாறி இம்முறை போட்டி நிலவுகிறது. புதிய அலைகள் என்ற பெயரில் உதவி இயக்குனர்கள் புதிய அணியை தொடங்கி, பெரிய இயக்குனர்களுக்கு தலைவலி கொடுத்தனர். இதனால் மல்லுகட்டிக் கொண்டிந்த பாரதிராஜா, அமீர் கோஷ்டிகள் ஒன்றிணைந்து விட்டார்கள்.
அதோடு விட்டார்களா இந்த புதிய அலைகள்? அதிரடி வாக்குறுதிகளை அரசியல்கட்சிகளுக்கு இணையாக அள்ளி விடத் தொடங்கியிருக்கிறார்கள். வேலை செய்த சம்பளத்தை வாங்கிக் கொடுப்போம் என்பதை பிரதான வாக்குறுதியாக வைத்திருக்கும் புதிய அலைகள், அரசிடம் பேசி லேப்-டாப், இலவச பஸ் பாஸ் போன்ற சலுகைகளை பெற்றுத்தருவோம் என்றும் வாக்குறுதிகளை அள்ளி விட ஆரம்பித்திருக்கிறார்கள்.
Tuesday 14 June 2011
இயக்குனர் சங்க தேர்தலில் இலவச லேப்-டாப் வாக்குறுதி!
Tuesday, June 14, 2011