Monday, June 20, 2011
விஜய் ஜோடியாக “வேலாயுதம்” படத்திலும் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.
இரு மாதங்களாக ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக நடித்ததால் ஹன்சிகாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் நடித்தார்.
“தந்திரீகா” என்ற தெலுங்கு படத்தில் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். இதன் பாடல் காட்சிக்காக சுவிட்சர்லாந்து செல்ல ஏற்பாடுகள் நடந்தது. ஹன்சிகாவுக்கு காய்ச்சல் இருந்ததால் படப்படிப்பு ரத்து ஆகும் சூழ்நிலை உருவானது. தனக்காக படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் என்று கூறிவிட்டு சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார்.
இதுபற்றி ஹன்சிகா கூறும்போது, தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து செல்ல ஏற்கனவே தேதி முடிவு செய்துவிட்டனர். காய்ச்சல் என்று நான் போகாமல் இருந்தால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார். என்னால் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனது தாய் ஒரு டாக்டர். அவர் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு சுவிட்சர்லாந்து கிளம்பி விட்டேன் என்றார்.