Monday, June 20, 2011
காஜல் அகர்வாலை தென்னிந்திய திரையுலகம்பிரபலப்படுத்தியது. பழனி, சரோஜா, பொம்மலாட்டம், நான்மகான் அல்ல போன்ற தமிழ் படங்களில் நடித்து முன்னணிநடிகையானார்.
இதுபோல் நிறைய தெலுங்கு படங்களிலும் நடித்தார். தமிழில்ஹிட்டான “சிங்கம்” படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அஜய்தேவ்கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்ககாஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
காஜல் மும்பையை சேர்ந்தவர். இந்தி “சிங்கம்” படநிகழ்ச்சியொன்றில் அவர் பேசும்போது, என்னை தென் இந்தியநடிகையாக நான் கருதியது இல்லை என்றார். இதற்குதெலுங்கு இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்,தெலுங்கு படங்கள் மூலம் வளர்ந்த அவர் இதுபோன்று, பேசிஇருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெலுங்கு இயக்குனர் ஸ்ரீதர்ரெட்டி கூறினார்.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர்.குமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் காஜல் அகர்வாலுக்குநிலையான இடத்தை தமிழ், தெலுங்கு திரையுலகம்தான்கொடுத்தன. தற்போது இந்திப்பட வாய்ப்பு கிடைத்ததும், தமிழ்சினிமாவை அவமதிக்கிறார். தமிழ் திரைப்பட தொழில்நுட்பகலைஞர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
இந்திப்பட கலைஞர்களை விட திறமைசாலிகளாய்ஜொலிக்கிறார்கள். அவர்களை கொச்சைப்படுத்துவது போன்றுகாஜல் அகர்வால் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.சூர்யாவுடன் “மாற்றான்” படத்தில் காஜல் நடிக்கக்கூடாது.அவரை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.