
தலைவர் ரஜினி விரைவில் உடல் நலம் பெற வேண்டி தஞ்சையில் சர்வமதப் பிரார்த்தனை நடந்தது. தஞ்சை மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் ரஜினிகணேசன் ஏற்பாட்டில், அனைத்து மாவட்ட ரஜினி மன்றத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்ற இந்த விழா தஞ்சை திலகர் திடலில் சிறப்பாக நடந்தது.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என மும்மதப் பெரியவர்கள் முன்னின்று இந்தப் பிரார்த்தனையை நடத்தினர்.
நாகை ரஜினி பாஸ்கர், திருச்சி ஷாகுல் ஹமீது, கடலூர் பெரியசாமி, விழுப்புரம் இப்ராஹிம், புதுக்கோட்டை குணா, திருவாரூர் தாயுமானவன், கோவை உலகநாதன், திருப்பூர் சதீஷ், கரூர் ராஜா, ராமநாதபுரம் பால நமச்சிவாயம், உதகை மூர்த்தி குமார், பெரம்பலூர் சண்முகதேவன், சேலம் பழனிவேல், தேனி சிவா, சிவகங்கை ஜெபி ரவி, தர்மபுரி செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி மாலை 7 மணிக்குத் துவங்கியது. முதல் 20 நிமிடங்கள் கிறிஸ்தவ முறைப்படியும், அடுத்த 20 நிமிடங்கள் இஸ்லாமிய முறைப்படியும், கடைசி 20 நிமிடங்கள் இந்து முறைப்படியும், தலைவர் ரஜினிகாந்த் பூரண நலமடைய வேண்டி பிரார்த்தனை நடத்தப்பட்டது.
நன்றிக் கடன்….
இஸ்லாமிய மதப் பிரார்த்தனையின் போது பேசிய லியாகத் அலி என்பவர் இப்படிக் கூறினார்:
“1998 ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடித்து, ஒட்டுமொத்த இஸ்லாமியரும் தீவிரவாதிகளாகப் பார்க்கப்பட்டபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிதான் எங்களுக்காகப் பேசினார். இஸ்லாமிய சகோதரர்கள் மீது தவறில்லை என்று கூறி பழி துடைக்க முனைந்த பெருமகன் அவர். இந்த நன்றியை நாங்கள் எப்படி மறக்க முடியும். அதற்காகவே எங்கள் சமுதாயத்தின் சார்பாக இன்று அவருக்காக பிரார்த்தனை செய்கிறோம். அவர் நலம் பெற்று நீடூழி வாழ்வார்,” என்றார்.
இந்த பிரார்த்தனை நிகழ்வு முழுவதையும் தஞ்சை மாவட்ட தலைமை மன்ற தலைவர் ரஜினி கணேசன் செய்திருந்தார். தஞ்சை நகர துணை தலைவர் தாய் வெங்கடேஷ், விருதுநகர் சக்திவேல் பாண்டியன், டி நகர் பழனி, மாரி, ஜோதி, குன்றத்தூர் ராஜ், தாம்பரம் ராஜமூர்த்தி, நீலகண்டன், குன்றத்தூர் பிரசாத், திருச்சி கலீல், ரஜினிபாபு, பவுன் முருகானந்தம் உள்ளிட்டோர் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.
விஜயகாந்த் – கமல், விஜய் – அஜீத் மன்றங்கள்
விஜயகாந்த் மன்றம் மற்றும் தேமுதிக நகர செயலாளர் எஸ்எஸ் அடைக்கலம், கமல்ஹாஸன் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் தரும சரவணன், விஜய் மன்றத் தலைவர் இரா விஜய் சரவணன், அஜீத் மன்ற மாவட்டத் தலைவர் ஏ வின்சென்ட், சூர்யா மன்ற மாவட்டத் தலைவர் வாசிம் ராஜா, தனுஷ் மன்ற மாவட்டத் தலைவர் சரவணன், சிம்பு மன்ற மாவட்டத் தலைவர் கந்த முருகன், சிவாஜி மன்றத்தைச் சேர்ந்த விஜய் ஆகியோர் பங்கேற்று தலைவர் ரஜினிக்காக பிரார்த்தனை மேற்கொண்டனர்.
பிரார்த்தனையின் இறுதியில் பேசிய ரஜினி கணேசன், தலைவர் ரஜினி சென்னை திரும்பும் போது அவருக்கு அனைத்து மாவட்ட மன்றங்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும், அப்போது தலைவரின் உடல்நலம் கருதி அருகில் செல்லாமல், தூரத்தில் நின்று அவரை தரிசிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது,