கடலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை சினேகா. நான் இன்னும் நடிப்பில் சாதிக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் சினேகா கூறுகையில் "நல்ல படங்கள்தான் முக்கியம். சம்பளமல்ல. அதனால்தான் இன்னும் கண்ணியமான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பதில் உறுதியாக உள்ளேன். என் திருமணம் இப்போது நடக்காது. அப்படி நடந்தாலும் அது நிச்சயமாக காதல் திருமணமாக இருக்காது. வீட்டில் பார்க்கும் பையனைத்தான் மணப்பேன்," என்றார்.