Thursday, June 23, 2011
சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்தார் அனுஷ்கா. அப்போது கன்னடப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் படத்தை புகழ்வதும், அந்த மொழியில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக புளுகுவதும் நட்சத்திரங்களின் வாடிக்கைதான். அனுஷ்கா பெங்களூரு சென்றது அவரது நண்பர் ரவீந்திரா இயக்கிய படத்தைப் பார்ப்பதற்காக.
படத்தைப் பார்த்த அனுஷ்கா இயக்குனரையும், படத்தையும் வெகுவாக புகழ்ந்தார். இப்படியொரு ஸ்கிரிப்ட் அமைந்தால் கன்னடத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாக அப்போது தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கில் வாங்கும் ஒன்றரை கோடி கன்னடத்தில் கிடைக்காது பரவாயில்லையா?