Monday, June 20, 2011
சல்மான் கான் இந்தியில் நடித்து வெளியாகி மாபெரும் ஹிட்டான "தபாங்" படம், தமிழில் "ஒஸ்தி" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஹீரோவாக சிம்பு நடிக்க, தரணி இப்படத்தை இயக்குகிறார். முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்குவதாக "ஒஸ்தி" படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு தொகையை, படத்தின் தயாரிப்பாளர் மூலம் சிம்பு வழங்கினார்.
பின்னர் சிம்பு பேசுகையில், படித்த மாணவர்களுக்கு உதவி செய்ய நிறைய அமைப்புகள் உள்ளது. ஆனால் நான் படிக்காத, படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் உதவி செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கேன் என்றார். எதையும், எப்போதும் வித்யாசமாக செய்பவர் சிம்பு. அதற்கு இதுவும் பொருந்தும். தற்போது ஒஸ்தியில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதால் அதற்கேற்றவாறு, தன்னை தயார்படுத்தி வருகிறாராம். இந்தவிழாவில் படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் தரணி நடிகர் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.