‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவரது தங்கை ஷாகன், தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்றும் அதற்கு டாப்ஸி உதவி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி டாப்ஸியிடம் கேட்டபோது கூறியதாவது: என் தங்கை ஷாகன் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இப்போது இல்லை. ஐதராபாத்தில் நடந்த விருது விழா ஒன்றுக்காக, எனக்கு துணைக்காக அவரை அழைத்திருந்தேன். அதற்காக வந்திருந்தார். இந்த வதந்தியால் அவர் நடிக்க வந்திருப்பதாக வதந்தி பரவியுள்ளது. இதையடுத்து எனது தங்கை பயத்தில் உள்ளார். இப்போது அவளுக்கு நடிக்கும் எண்ணமில்லை. இவ்வாறு டாப்ஸி கூறினார்.