Monday, June 20, 2011
முன்னாள் குத்தாட்ட நடிகை அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ. இவரும் பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். ஒரு பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். தெலுங்கு படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். தற்போது அவர் கார்மென்ட் பிசினஸில் இறங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் தேவையான அளவுக்கு நடித்து விட்டேன், ஆடிவிட்டேன். சினிமாவின் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடிட்டிங், கிராபிக்ஸ், சவுண்ட் என்ஜினீயரிங் கற்றேன். ரெக்கார்டிங் தியேட்டர் கட்ட வேண்டும் என்பது ஆசை. தற்போது பெரிய நிறுவனம் ஒன்றின் ரெடிமேட் ஆடைகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்றுள்ளேன். அண்ணாசாலையில் உள்ள ஷாப்பிங் மாலில் விரைவில் ஷோரூம் தொடங்க உள்ளேன். இதன் கிளைகளை மற்ற இடங்களிலும் தொடங்குவேன்.