இந்த படத்தில் ஹாலிவுட் நடிகை ஹாலே ப்பெர்ரி மாதிரி துள்ளி குதித்து இசா கமலுடன் நடிக்க போகிறாராம்.
தமிழில் எடுக்கப்பட உள்ள "விஸ்வரூபம்" படம் சிலிர்க்க வைக்கும் த்ரில்லர் படம். இது கமலின் கனவு படம் என்று கூட கூறலாம். ஐரோப்பிய நாடுகளில் சுமார் எழுப்பத்தி ஐந்து நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக வெளிநாட்டின் உதவியை நாடியுள்ளார்கள். இந்தியாவின் முக்கியமான கலைஞர்களின் ஒருவரான கமலஹாசனின் படத்திற்காக பணியாற்ற வெளிநாட்டில் உள்ளவர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். சோனாக்சி சின்ஹா நடிக்க இருந்த ரோலில் இசா ஷர்வானியை நடிக்க வைக்க பேசியுள்ளார்கள் என்று பட வட்டாரம் கூறுகிறது. ஆனால் இது பற்றி இஷாவிடமிருந்து உறுதியான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதையும் கூறியுள்ளார்கள். |