Wednesday, June 15, 2011
ஈரோடு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஈரோடு ரயில் நிலையத்தில், நடைபெற்ற சேலம் கோட்ட சிறப்பு விளக்க கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று பேசிவருகிறார் கலைஞர்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு துணை போகாது. கட்சியின் பெரிய தலைவரான கல்மாடி உழல் செய்துவிட்டதாக தெரிந்த உடனே அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.
கூடா நட்பு உங்களுக்கு லேட்டாகத்தான் தெரிகிறது. அனால் நான் ஒரு மாதம் முன்பே சவகாச தோஷம் பற்றி பேசிவிட்டேன்.
இலவசம்.. இலவசம்.... என்று பொருளை வழங்காமல் மக்களுக்கு இலவசமாக கல்வியை மட்டும் கொடுக்க வேண்டும். அப்போது தான் கல்வித்தரம் உயரும், மனித சக்தி உயரும், மக்கள் வாழ்க்கை தரம் உயரும் என்றார்.