தெலுங்கு மற்றும் இந்திப் படவுலகில் பிஸியாகி விட்டதால் தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்டார் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கிறங்கடித்தவர் நடிகை டாப்ஸி. வெள்ளாவிப் பெண் என்ற பட்டப்பெயருடன் தமிழ் சினிமாவை ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த பலரும் ஏமாற்றமடைந்தனர். ஆடுகளத்திற்கு பிறகு அம்மணிக்கு வாய்ப்பு தர யாருமே முன்வரவில்லை. தமிழில் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டாலும், தெலுங்கில் அம்மணியின் அழகு மேனிக்கு ரத்தின கம்பள வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தமிழில் இருந்து சத்தமில்லாமல் தெலுங்கு பக்கம் போன டாப்ஸி, 4 படங்களை முடித்து விட்டாராம். மேலும் 2 புதிய தெலுங்கு படங்களில் கமிட் ஆகியிருக்கும் அதேநேரம், இந்திப்பட வாய்ப்புகளும் வந்துள்ளனவாம். இந்தியில் டேவிட் தவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ள டாப்ஸி தற்காலிகமாக தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டார். கமிட் ஆகியிருக்கும் படங்களில் நடித்து முடித்த பின்னர்தான் தமிழ் மற்றும் மலையாள சினிமா பக்கம் வருவேன் என்று டாப்ஸி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.