""நித்யானந்தாவுடன் இருப்பது நான் இல்லை. அது, "மார்பிங் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. என்னை பற்றி அவதூறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பி, என்னை அசிங்கப்படுத்தி, சீரழித்த சன், "டிவி மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என, எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, என, நடிகை ரஞ்சிதா கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் தனி அறையில் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள், சன் "டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகின. நாடு முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்கள் மீது தாக்குதல் நடந்தது. "டிவியில் ஒளிபரப்பான காட்சிகளில் உண்மை இல்லை; அவை "மார்பிங் முறையில் உருவாக்கப்பட்டவை என, நித்யானந்தா ஆசிரமம் விளக்கம் அளித்தது. நித்யானந்தரை பெங்களூரு போலீஸ் கைது செய்தது. பின் விடுவிக்கப்பட்ட அவர், "என்னிடம் 100 கோடி ரூபாய் கேட்டு, சிலர் மிரட்டினர். அதற்கு நான் ஒத்துவராததால், தாக்குதல் நடத்தியுள்ளனர் என, பரபரப்பு பேட்டி அளித்தார்.