Saturday, 2 July 2011
இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு.
Saturday, July 02, 2011
சூர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்த படம் சிங்கம் ஞானவேல்ராஜா தயாரித்தார். இப்படம் இந்தியில் அஜய்தேவ்கான், காஜல்அகர்வால் நடிக்க “ரீமேக்” ஆகியுள்ளது. வருகிற 22-ந்தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தி “சிங்கம்” படத்தை தடைசெய்ய கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
“சிங்கம்” படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அப்போது படத்தை விற்கும்போது 25 சதவீதம் பங்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டோம். தற்போது இப்படம் ரூ. 80 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. அதில் 25 சதவீதம் பங்காக ரூ. 12 1/2 கோடி தர வேண்டும்.
ஆனால் அப்பணத்தை தராமல் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஞானவேல்ராஜா சார்பில் வக்கீல்கள் மனோகர், சகாதேவன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன் இவ்வழக்கில் பதில் அளிக்கும்படி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.