
இதுகுறித்து இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபுவிடம் கேட்டதற்கு; “ஆமாம், மங்காத்தாவில் பல்லேலக்கா படல் இடம்பெறுகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் ரஜினியின் பாடலாக அல்ல. இப்படத்தில் வரும் பாடலின் முதல் வரி பல்லேலக்கா என்று துவங்கும் ஆனால், அதன் பிறகு வரும் வரிகளும் சரி, அதற்கு இசைமைத்துள்ள யுவனும் சரி, அனைத்தையும் வித்தியாசமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்” என்றார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் இப்பாடலை விஜய் யேசுதாஸும், இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷாவும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்.