சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில், எந்த வகையான காஸ்ட்யூமும் தனக்கு ஓ.கே தான்;ஆனால் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் கூடவே கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார் வித்யா பாலன். தற்போது ஐதராபாத்தில் சூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் வித்யாவை கவர்ச்சிகரமாக காட்டும் பொறுப்பை அவரது காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா கான் ஏற்றுள்ளார். அவரிடம்தான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிய மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கிறார் வித்யா. ஏன் ஸ்லீவ்லெஸ் வேண்டாம்? என்று அம்மணியிடம் கேட்டால், ஸ்லீவ்ஸெல் போட்டால் தனது தோள்பட்டைகளும், அக்குளும் பட்டவர்த்தனமாக தெரியும். அதை நான் விரும்பவில்லை என்று கூறுகிறாராம். |