
Monday, July 04, 2011

நடிகை ஸ்ரேயா குடி போதையில் ஆடுவது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளது. ரீமா சென் சக நடிகர், நடிகை மற்றும் தோழிகளுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மது விருந்து அளித்ததாகவும் அதில் ஸ்ரேயா பங்கேற்று அளவுக்கு மீறி குடித்து போதையில் தள்ளாடியதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளன.
அதோடு இப்படமும் வெளியாகியுள்ளது. விருந்து முடிந்ததும் ஸ்ரேயா நடக்க முடியாமல் கீழே விழப்போனாராம்,. அவரது தோழிதான் கைத் தாங்கலாக அழைத்து போய் காரில் ஏற்றி வீட்டில் இறக்கி விட்டாராம். ஆனால் அதனை ஸ்ரேயா மறுத்துள்ளார். இது முட்டாள் தனமானது அவதூறு என்று கண்டித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
நான் போதையில் தள்ளாடியதாகவும், ஆட்டம் போட்டதாகவும் கிசுகிசுக்கள் பரவி இருப்பது வேதனை அளிக்கிறது. எனக்கு எதிராக இது போன்ற அவதூறு பரப்பியவர்களை சும்மா விடமாட்டேன். நான் நட்சத்திர ஓட்டல் பப்களுக்கு அபூர்வமாகத்தான் போவேன். கடந்த சில நாட்களாக எந்த பப்புக்கும் போகவில்லை.
மதுவும் அருந்தவில்லை. என்னைப் பற்றி இது போன்று வதந்திகளை பரப்பியது யார் என்று தெரியவில்லை. எதற்காக இப்படி பரப்பினார்கள் என்றும் புரியவில்லை. இன்டர் நெட்டில் நான் குடித்து விட்டு ஆடுவது போன்று படம் வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. மார்பிங் செய்து அப்போட்டோவை வெளியிட்டுள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு ஸ்ரேயா கூறியுள்ளார்.