அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை ஆனித்தரமாக பதிவு செய்யும் அசாத்திய இயக்குநர் தங்கர் பச்சான். தற்போது, "களவாடிய பொழுதுகள்" படம் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஐங்கரன் தயாரிப்பாளர்கள் சில தினங்களுக்கு முன், "களவாடிய பொழுதுகள்" படத்தை பார்த்துவிட்டு, இயக்குநரை முன்வந்து பாராட்டி, படத்தை உடனே வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இம்மாதம் படம் திரைக்கு வர இருக்கிறது.
படத்தில் பிரபுதேவா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம். இந்தபடம் மூலம் தங்கருக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே நல்ல கருத்தொற்றுமை கிடைத்துள்ளதாம். எப்படி காட்சி வரவேண்டும் என்று இயக்குநர் நினைத்தாரோ, அதன்படி இயல்பாகவும், அற்புதமாகவும் நடித்துள்ளாராம் பிரபுதேவா. இதனால், தங்கர்பச்சான் அடுத்து இயக்க இருக்கும் புதிய படமான, "மீண்டும் மழை வருமா" படத்தில் ஹீரோவாக பிரபுதேவாவையே நடிக்க வைக்கலாம் என்று தங்கர் பச்சான் எண்ணியிருப்பதாக கூறப்படுகிறது. குடும்பத்தோடு அனைவரும் அமர்ந்து பார்க்கும் வகையில் "மீண்டும் மழை வருமா" படக் கதையை உருவாக்கியிருக்கிறாராம். களவாடிய பொழுதுகள் படம் வெளிவந்த பின்னர் இந்தபடம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.