Tuesday, July 19, 2011
நடிகை அனுஷ்கா, தான் நடித்த "தெய்வத்திருமள்" படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்திருக்கிறார். விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் "தெய்வத்திருமகள்". ஆரம்பத்தில் தெய்வத்திருமகன் என்று பெயரிட்டு, பின்னர் ஒரு சமூகத்தாரின் எதிர்ப்பை அடுத்து "தெய்வ திருமகள்" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இப்படத்திற்கு எக்கச்சக்க விருதுகள் நிச்சயம் என்று ரசிகர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த திரையுலகமே சொல்லி வருகிறது.
படத்தில் அனுஷ்கா வக்கீலாக நடித்திருக்கிறார். விக்ரமுக்கு ஜோடி இல்லை என்றாலும், பெரும்பாலான காட்சிகளில் விக்ரமுடன் தலைகாட்டும் அனுஷ்காவின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து அனுஷ்கா, தெய்வத்திருமகள் படத்தை பார்த்திருக்கிறார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், தெய்வத் திருமகள் படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்த்தேன். ரொம்பவும் ரசித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ரசிகர்களின் மனநிலை மாறியிருக்கிறது. நல்ல படங்களை ரசிக்கிறார்கள். ஆக்ஷன், காதல் படங்கள்தான் ஓடும் என்றில்லை. இதனை தெய்வ திருமகள் மூலம் புரிந்து கொண்டேன். இது மகிழ்ச்சிக்குரிய மாற்றம்தான், என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழில் எத்தனை வெற்றிப்படங்களில் நடித்தாலும் தெலுங்குக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன்; ஏன்னா... தெலுங்குதான் என்னை வளர்த்தது என்றும் அம்மணி சொன்னார் என்பது கூடுதல் தகவல்.