"இனிது இனிது" படத்திற்குப்பின் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் "தேநீர் விடுதி" படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மி, அழகிய கேரள வரவு. ஆனால் அம்மணி கேட்கும் சம்பளமோ ஆபத்தான அளவு! என்று முணுமுணுக்கிறது கோடம்பாக்கம்! அப்படி எவ்வளவு சம்பளம் கேட்கிறாராம் ரேஷ்மி...? பத்து லட்சத்திற்கு மேல சம்பளம் கேட்டு பந்தா பண்ணுதாம் அந்தப்பொண்ணு!
"இனிது இனிது", "தேநீர் விடுதி", இரண்டு படமும் எதிர்பார்த்த அளவு போகலை... "இனிது இனிது" படத்திற்கு ஒரு லட்சமும், "தேநீர்விடுதி" படத்திற்கு இரண்டு லட்சமும் சம்பளம் வாங்கிய ரேஷ்மி, இப்போ திடீரென தன் சம்பளத்தை பத்து லட்சம் என உயர்த்தி கேட்பதால் தேடி வந்த இரண்டொரு வாய்ப்புகளும் திரும்பி போய் விட்டனவாம்! ரேஷ்மிக்கு யாரோ தப்பா யோசனை சொல்லுதாங்கே...!