
மன்னன் பிலிம்ஸ் பட நிறுவனம் தங்களது இரண்டாவது படைப்பாக உருவாக்கி வரும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் சப்தமில்லாமல் நடந்தேறி வருகிறது. இதில் தருண்கோபியின் மாமியார் பேச்சியக்காவாக ஊர்வசி நடிக்க தருண்கோபியின் ஜோடியாக புதுமுகம் பிரியங்கா நடிக்கிறார். சமீபத்தில் துணை நடிகருக்கான விருதுக்கு தேர்வாகியுள்ள தம்பி ராமையா, மைனா சூசன், அங்காடித்தெரு சிந்து உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் பேச்சியக்கா மருமகன் படத்தில் பாலமுருகன் என்பவரது இயக்கத்தில் நடிக்கின்றனர். ஒருவேளை இப்பட பெயர் மாற்றத்திற்கு உள்ளாகலாம் என்பதால் இப்போதைக்கு பப்ளிசிட்டிகள் செய்யாமல் இருந்து வருகிறதாம் பேச்சியம்மா மருமகன் யூனிட்! அட!!