Sunday, May 22, 2011
பொதுவாக நடிகர், நடிகைகளின் கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்தவகையில் நடிகர் ஆர்யாவுக்கு கொஞ்சம் அதிகம் தான். ஆர்யா குறித்து நிறைய கிசுகிசுக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏற்கனவே நடிகர் ஆர்யா, நடிகை பூஜாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.
அதனைத்தொடர்ந்து மதராசபட்டிணம் படத்தில் நடித்த எமி ஜாக்சனுடன் காதல் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இந்நிலையில் இப்போது கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரேயை, ஆர்யா காதலிப்பதாகவும், இருவரும் ரகசியமாக சந்தித்து பேசி வருவதாகவும் செய்திகள் வரத் துவங்கியுள்ளன. இருவரும் தில்லு முல்லு படத்தில் நடித்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகை ஷர்மிளா மந்த்ரே கூறுகையில், "ஆர்யாவை நான் காதலிப்பதாக வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சிக்குள்ளானேன். தமிழில் ஆர்யாவுடன் தில்லு முல்லு படத்தில் நடித்து வருகிறேன். என்னுடன் நடிக்கும் சக நடிகர்களிடம் எப்போதும் நட்பு ரீதியாக தான் பழகுகிறேன். அதுபோலதான் ஆர்யாவுடன் பழகினேன். மற்றபடி காதல் எதுவும் கிடையாது. இதுபோன்ற வதந்தி பரவக் காரணம் வெளிப்புறப்படப்பிடிப்பில் நாங்கள் சந்தித்து பேசியதுதான். தெலுங்கு பட சூட்டிங்கில் நான் இருந்தபோது, எனக்கு பக்கத்து யூனிட்டில் ஆர்யா நடித்த தமிழ்பட சூட்டிங் நடந்தது. அப்போது இருவரும் சந்தித்து பேசினோம். உடனே அதை காதல் என்று கதை கட்டிவிட்டார்கள்" என்றார்.