Monday, June 06, 2011
"பிதாமகன்" படம் விக்ரமிற்கு எப்படி தேசிய விருது பெற்று தந்ததோ, அதுபோல "அவன் இவன்" படமும், விஷாலுக்கு நிச்சயம் விருது பெற்று தரும் என்று கூறுகிறார் டைரக்டர் பாலா. "சேது", "பிதாமகன்", "நான் கடவுள்" உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் பாலா, அடுத்து ஆர்யா, விஷாலை வைத்து அவன் இவன் என்ற படத்தை இயக்கியுள்ளார். பாலாவின் வழக்கமான படத்தை போன்று இல்லாமல், இந்தபடத்தை சிறிது கமர்ஷியலாக எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் "அவன் இவன்" குறித்து பாலா பேசியதாவது, பொதுவாக என்னுடைய படங்கள் உணர்வுபூர்வமாக இருக்கும், ஆனால் "அவன் இவன்" படம் சற்று வேடிக்கை நிறைந்ததாகவும், அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். ஒரு கிராமத்தில் இரண்டு திருடுர்கள் செய்யும் அட்டகாசமும், அவர்களது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களும் தான் படத்தின் கதை. இந்தபடத்தில் விஷால் மிகவும் வித்யாசமான கேரக்டரில் நடித்து இருக்கிறார். அவன் இவனுக்கு பல ரிஸ்க் எடுத்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் மிகவும் உயரமான இடத்தில் இருந்து குதிப்பது போன்று அமைக்கப்பட்டது. அதில் டூப் போடாமல் அவரே நடித்திருந்தார். மேலும் சூட்டிங்கில பல காட்சிகளில் அவருக்கு அடிபட்டது. அதையும் தாண்டி அவர் சிறப்பாக நடித்தார். குறிப்பாக படம்முழுக்க மாறு கண்ணுடன் நடித்திருப்பது மிகுந்த சிரமமான காரியம். ஆனால் அதையும் அவர் சிறப்பாக நடித்து கொடுத்தார். நிச்சயம் இந்தபடம் அவருக்கு விருது பெற்று தரும் படமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
பொதுவாக பாலா தான், தன்னுடைய படங்களை எடுக்க இழுத்தடிப்பார். ஆனால் இந்ததடவை பாலா படத்தை சீக்கிரமாக முடித்துவிட்டார். ஆனால் ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட பல பிரச்சனைகளால் இப்படம் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக இம்மாதம் ஜூன் 17ம் தேதி அவன் இவன் திரைக்கு வர இருக்கிறது.