Sunday, June 05, 2011
"காதல் கோட்டை" படத்திற்காக தேசிய விருதுபெற்ற இயக்குநர் அகத்தியனின், மகள் விஜயலெட்சுமி, டைரக்டர் வெங்கட்பிரபுவின் "சென்னை-28" படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு "அஞ்சாதே" படத்தில் நடித்த அவருக்கு, அதன்பின் வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். ஆனாலும், தொடர்ந்து படங்களில் நடிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் புதிதாக எடுக்கப்பட்ட தன்னுடைய போட்டோ சூட் படங்களை, பல்வேறு சினிமா பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கு அனுப்பி வைத்தார். அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. அவர் அனுப்பிய படங்களை பார்த்து சிலர், தங்களுடைய படத்தில் நடிக்க விஜயலெட்சுமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். விரைவில் விஜயலெட்சுமியின் அடுத்தபடம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே இவ்வளவுகால காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும், மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளதாலும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜயலெட்சுமி.