Saturday, June 04, 2011
சீயான் விக்ரம் அடுத்து, டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ராஜபாட்டை என்று பெயரிட்டுள்ளனர். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என்று ஒவ்வொரு படத்திற்கு வித்யாசமான படங்களை கொடுத்து கொண்டு வரும் டைரக்டர் சுசீந்திரன், அடுத்து விக்ரம்மை வைத்து ஒரு படம் பண்ணப்போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தீக்ஷா செத் நடிக்கிறார். இவர்கள் தவிர தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு முதலில் வேந்தன் என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வந்தது. ஆனால் இப்போது படத்திற்கு ராஜபாட்டை என்று பெயரிட்டுள்ளனர். கூடவே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் டெக்னீசியன்கள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் மெல்லிய காதலையும் சேர்த்துள்ளனர். எஸ்.பி.கிரியேசன்ஸ் சார்பில் பிரதீஸ் - சந்தோஷ் தயாரிக்கிறார். சுசீந்திரன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜூன் 7ம் தேதி முதல் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது. படம்முழுக்க சென்னையிலேயே படமாக்கப்பட இருக்கிறது.