Tuesday, July 12, 2011
ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு லட்சியம்; ஒரு கொள்கை இருக்கும். அது எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரணும்; வெற்றிப்படங்களில் நடிக்கணும் என்பதுதான் நடிகைகளின் லட்சியமும்; கொள்கையும். அதற்கு அமலா பால் மட்டும் விதிவிலக்கா என்ன? "மைனா" படம் வெற்றியால் குஷியான அம்மணி மீது மீண்டும் "தெய்வதிருமகள்" ரூபத்தில் அதிர்ஷ்ட தேவதையின் கண்களில் விழுந்தார். தேசிய விருது நிச்சயம் என்கிற கேட்டகிரியில் இருக்கும் தெய்வதிருமகள் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கப்போகும் ராஜபாட்டை படம் பற்றி அறிந்த அமலா பால், விக்ரமுடன் பேசி ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கேட்டார். சீயானும்... அமலாவின் நடிப்பை பார்த்து மயங்கி ராஜபாட்டையில் நடிக்க வாய்ப்பு பெற்றுக் கொடுத்ததாக கூறப்பட்டது. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. சீயானுக்கும், மைனாவுக்கும் காதல், கீதல் கிசுகிசு தாறுமாறா வெளியேற ஆரம்பித்ததுதான் விணை.