Tuesday, May 03, 2011
'ராணா' படத்தில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணாக நடிக்கிறேன் என்று தீபிகா படுகோன் கூறினார்.ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் 'ராணா' படத்தில் நாயகியாக நடிக்கிறார் இந்தி நடிகை தீபிகா படுகோன்.ரஜினியுடன் நடிப்பதால் என் கனவு நனவாகிவிட்டது என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று கனவு கூட கண்டதில்லை.
இது அதையும் தாண்டிய ஒரு பெரிய விடயம். இதில், 17-ம் நூற்றாண்டு தென்னிந்திய பெண்ணாக நடிக்கிறேன்.
அந்த காலத்தில் எப்படி இருப்பார்களோ அதே போன்ற உடை, அணிகலன்களுடன் நடிக்கிறேன்.
'தேவதாஸ்' இந்தி படத்துக்கு உடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நீதா லுல்லா தான் இதிலும் பணியாற்றுகிறார்.
இப்போது பாடல் காட்சியில் நடித்து வருகிறேன். ரஜினியுடன் நடிக்கப் போகும் நாட்களுக்காக காத்திருக்கிறேன். ரஜினிகாந்த் ஒரு தலைசிறந்த நடிகர்.
இது போல் மிகப்பெரிய வாய்ப்பு இனி எனக்கு கிடைக்கப்போவதில்லை. நான் தென்னிந்தியாவை சேர்ந்தவள் என்றாலும் நல்ல படங்கள் மூலமாக தமிழில் அறிமுகமாக காத்திருந்தேன்.
இதற்காக கதைகளை கேட்டு வந்தேன். 'ராணா' வாய்ப்பு வந்தபோது இது எனக்காகவே வந்ததாக நினைத்துக்கொண்டேன்.
இதற்கு முன் ரஜினி படங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். ஒரே ஒரு படம்தான் பார்த்திருக்கிறேன். நான் பார்த்த அந்த படம் 'எந்திரன்' என்று தீபிகா படுகோன் கூறினார்.