Monday, May 02, 2011
நடிகை அசின் இந்தி கஜினி மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். அப்படத்தில் நடிகர் அமீர்கான் ஜோடியாக அறிமுகம் ஆனார் அசின்.அதனைத் தொடர்ந்து நடிகர் சல்மான்கானுக்கு ஜோடியாக லண்டன் ட்ரீம்ஸ் ரெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே அசின் மும்பையில் பொது இடங்களுக்கு வரும்போது பர்தா அணிந்து வருவதாக தகவல் பரவிவருகிறது.பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான கரீனா கபூர், கேத்ரினா கைப் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் மும்பையில் பொது இடங்களில் பொருட்களை வாங்க வரும்போது ரசிகர்கள் எளிதாக பார்க்க முடியும்.
ஆனால் தென்னிந்திய நடிகையான அசினை மட்டும் பார்க்க முடிவதில்லை. ஏனெனில் ரசிகர்களின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் பர்தா அணிந்து சுற்றுவதாக பாலிவுட்டில் கூறப்படுகின்றது.
சமீபத்தில் மும்பை கார் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு அசின் பர்தா அணிந்தவாறு சென்றார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பிரபலங்கள் வியப்படைந்தனர்.
அசின் அழகு நிலையத்திற்கு சென்ற சமயத்தில் அங்கிருந்த மற்றொரு பாலிவுட் பிரபலம் கூறுகையில் பிபாசா பாசு அழகு நிலையத்திற்கு வரும்போது முகத்தை மறைக்காமல் வெளிப்படையாகவே வருவார்.
இதே போன்று பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் இங்கு வரும்போதும் அனைவரும் அறியும் வகையிலேயே வருவார்கள். ஆனால் அசின் மட்டும் முகம் வெளியே தெரியாதவாறு பர்தா அணிந்து வருவது வியப்பாக உள்ளது. அவர் தேவையற்ற வகையில் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதை விரும்பவில்லை என நினைக்கிறேன் என்றார்