நடிகர் பிரபுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு இதுவரை 200 படங்களில் நடித்திருக்கிறார். அவரது கலைச்சேவையை பாராட்டி சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. வரும் 12ம்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரபுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இவ்விழாவில் நடிகர் பிரபு கலந்து கொண்டு டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்கிறார்.