
சீனாவின், ஷாங்காய் நகரில் 14வது உலக திரைப்பட விழா நடக்கிறது. உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட படங்கள் இவ்விழாவில் கலந்து கொள்கிறது. இதில் முதன்முறையாக தென்னிந்தியாவிலிருந்து காவலன் படம் மட்டுமே தேர்வாகியுள்ளது. காவலன் படம் பனோரமா பிரிவில் தேர்வாகியுள்ளது. இத்தகவலை விஜய்யின் பி.ஆர்.ஓ. செல்வக்குமார் தெரிவித்தார். வருகிற ஜூன் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கும் இவ்விழாவிற்கு, விஜய்யையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர் விழாக்குழுவினர்.