Friday, May 06, 2011
சம்பளம் அதிகம் தந்தாலும் நல்ல கதையம்சம் இல்லாத மோசமான படங்களில் நடிக்க மாட்டேன் என்று திரிஷா கூறினார். இது குறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நடிகர், நடிகைகள் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். படம் வெற்றி பெறும்போது இதுபோன்ற படத்தில் நடிப்பது அதிர்ஷ்டம், அற்புதமான கதையென்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய் விடுகிறது.
எனவே இதுபோன்று தாங்கள் நடிக்கும் படங்களை மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும்.
படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும்.நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்.