ரஜினியின் “ராணா” படத்தில் நாயகி தேர்வில் நடந்த பரபரப்பு விஷயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ரஜினியால்தான் நாயகி வாய்ப்பு தீபிகா படுகோனேவுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
“ராணா” பட கதாநாயகியாக முதலில் சோனாக்ஷி சின்ஹாவை தேர்வு செய்துள்ளனர். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரும், தயாரிப்பாளர்களும் சோனாக்ஷியை பொருத்தமானவர் என்று கூறினர். இதையடுத்து அவரிடம் கால்ஷீட் பெற ஏற்பாடுகள் நடந்தன.ஆனால் ரஜினி உடன்படவில்லை. சோனாக்ஷியின் தந்தை சத்ருகன் சின்ஹாவும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். 1986-ல் அஸ்லி நக்லி என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அன்று முதல் இருவரது குடும்பத்தினரும் நெருக்கமானார்கள்.சத்ருகன் சின்ஹா ஸ்டைலை நான் பின்பற்றுகிறேன் என்று ரஜினி அடிக்கடி கூறி உள்ளார். எனவே நண்பர் மகளுடன் ஜோடியாக நடிக்க ரஜினி விரும்பவில்லை. இதையடுத்து நாயகி மாற்றப்பட்டு தீபிகா படுகோனேவை தேர்வு செய்தனர்.சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் சென்னை திரும்புகிறார். ஆகஸ்டில் “ராணா” படப்பிடிப்பு துவங்குகிறது.