Monday, June 20, 2011
ஏ.ஜி. எண்டர்டெயின்மெண்ட் தயாரி்ப்பில், புதியவர் ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில், "முன்தினம் பார்த்தேனே" சஞ்சய், சுமித்ராவின் 2வது வாரிசு நட்சத்திரா ஜோடி நடித்திருக்கும் "டூ" படத்தின் ஆடியோ வெளியீட்டு சமீபத்தில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்தவிழாவில் தயாரி்பாளர்கள் கே.ஆர்.ஜி., கேயார், ஆர்.பி.செளத்ரி, "பட்டியல்" சேகர், "மோசபியர்" தனஞ்ஜெயன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, வஸந்த், "களவாணி" சற்குணம், நடிகர் கிருஷ்ணா, நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்டவர்களுடன் அஷ்டாவதனி டி.ஆரும்., கலந்து கொண்ட விழா மேடை, ஒரு சினிமா பார்த்த திருப்தியை தந்தது என்றால் மிகையல்ல!
அதற்கு காரணம் மேற்படி மேடையில் டி.ஆர்., திடீரென இன்ஸ்ட்ரூமெண்ட்களே இல்லாமல் இசையமைத்ததும், குறிப்பேடுகள் இல்லாமல் கதை சொன்னதும், பாடியதும், ஆடியதும்தான் முக்கிய காரணம். அத்தனை களோபரத்திலும் தனஞ்ஜெயன் தான் பேசியபோது, இனி படம் எடுக்க வேண்டுமென்றால் படம் தயாரிக்க ஒரு கோடி செலவாகுமென்றால், பப்ளிசிட்டிக்கு என்று குறிப்பாக டி.வி., உள்ளிட்ட மீடியா பப்ளிசிட்டிகளுக்கென்று ஒரு கோடி எடுத்து வைத்து கொள்ள வேண்டும் என்றார்.
அதற்கு ஆர்.கே.செல்வமணி பப்ளிசிட்டிக்கென்று தனியாக பணம் வைத்து கொள்வது என்பது முடியாத காரியம். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். வேண்டுமானால் டப்பிங் படங்களுக்கு தனியாக விளம்பரம் கொடுத்தும், தமிழ் படங்களுக்கு சற்றே பெரிதான தனிமாதிரியான விளம்பரங்கள் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். கூடவே டப்பிங் படங்கள் ரிலீஸ் செய்வதில் சில சட்டதிட்டங்களையும் வரையறுக்கவும் வேண்டும் என்றார்.
அத்தனை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்திற்கிடையேயும் இதை மனதில் குறித்து வைத்து பேசிய டி.ஆர்., தனஞ்ஜெயன் சொல்வதும் கவனிக்கத்தக்கது, ஆர்.கே.செல்மணி சொல்வதும் கவனிக்கத்தக்கது. இப்போது சினிமா, "டிஜிட்டல்", "க்யூப்", "யூஎஃப்ஒ" என மாறிவிட்டது. நாமும் மாறவேண்டும். ஊதிய உயர்வு கேட்டு போராடும் தொழிலாளர்களையும் மாற்ற வேண்டும் என்றார். இன்னமும் பட பிரிண்ட்டுகள் தான் போடவேண்டும், "க்யூப்", "யூஎஃப்ஒ" கூடாது என்றோ, 5 வருடம் கழித்துதான் டி.வி.,யில் படம்போட வேண்டும் என்றோ பேசுவது எவ்வாறு ஒத்துவராதோ, அதுமாதிரிதான் இன்னும் பல பிரச்சனைக்குரிய விஷயங்களும் என்றார்.
டி.ஆர்., சொன்னது யாருக்கு...? தொழிலாளிகளுக்கா...? அல்லது தயாரிப்பாளர்களுக்கா...?!