Sunday, June 19, 2011
தமிழ், தெலுங்கு, இந்தி, என்று ஒரு ரவுண்ட் வந்துவிட்ட த்ரிஷாவுக்கு இப்போது போஜ்புரி படங்களிலும் நடிக்க அழைப்பு மேல், அழைப்பு வந்து கொண்டிருக்கிறதாம். பாலிவுட், தென்னிந்திய படங்களுக்கு அடுத்தபடியாக சிறந்த அளவில் படங்களை கொடுப்பது போஜ்பூரி சினிமா. இங்கு நடிக்காத தென்னிந்திய நாயகிகளே கிடையாது. தமிழ் உட்பட தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்த நக்மா, ரம்பா உள்ளிட்ட நடிகைகள் கூட போஜ்பூரி சினிமாவில் ஒரு ரவுண்ட் வலம் வந்து அசத்தியுள்ளனர். இப்போது அந்தவரிசையில் த்ரிஷாவும் இணையப்போகிறார்.சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியை தாண்டி வேறு மொழி படங்களிலும் நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். அதன்விளைவாக கன்னடத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதையடுத்தே போஜ்பூரி படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்ததாம். ஆனால் த்ரிஷா இப்போதைக்கு நோ சொல்கிறாராம். காரணம் தென்னிந்தியாவில் பீல்ட் அவுட் ஆன நடிகைகள் தான் போஜ்பூரிக்கு போவார்களாம். இப்போது நானும் போஜ்பூரி சென்றால் என்னையும் பீல்ட் அவுட் நடிகைகள் வரிசையில் சேர்த்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறாராம். இருந்தாலும் நல்ல கதை மற்றும் அதற்கேற்ற பாத்திரம் எனக்கு அமைந்தால் பிற மொழி படங்களில் நடிப்பேன் என்று கூறுகிறார்.