Monday, June 20, 2011
நான் இசையமைக்கும் படத்தில் உள்ள பாடல்கள் வெற்றி பெற்றாலும் சரி, அல்லது தோல்வியடைந்தாலும் சரி அதை என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறுகிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். மின்னலே படத்தில் தொடங்கி எங்கேயும் காதல் படம் வரை பெரும்பாலான படங்கள் அனைத்திற்கும் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு சமீபத்தில் வந்த "கோ" படத்தின் இசை சரியாக போகவில்லை என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது, பொதுவாக நான் ஒரு படத்திற்கு இசையமைத்து முடித்த பின்னர், அது வெற்றி பெற்றாலும் சரி அல்லது தோல்வியடைந்தாலும் சரி அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால் பாடலோ அல்லது படம் வந்த பிறகு எப்படி இருக்கிறது என்று என்னுடைய உதவியாளர்கள்தான் வந்து கூறுவர். ஒவ்வொரு படத்திற்கும் இசையமைக்கும் போது ஒருவிதமான புது அனுபவத்தை உணர்கிறேன். படத்திற்கு படம் புது இசையை மட்டுமே கொடுக்க நினைக்கிறேன். தற்போது நண்பன் படத்தின் இசையமைப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அனைத்து பாடல்களும் ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும். அதேபோல் இந்தியில் எடுக்க போகும் காக்க காக்க படத்திற்கும் புதுசா தான் மெட்டு அமைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.