Monday, June 20, 2011
வாழ்க்கையிலும், சினிமாவிலும் தனது இரண்டாவது அத்யாயத்தை ஏற்றிருக்கும் சோனியா அகர்வாலுக்கு டைரக்டர்கள் பாலா, கவுதம் வாசுதேவ்மேனன் ஆகியோரது படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். டைரக்டர் செல்வராகவனை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் சினிமாவில் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கும் சோனியாவிற்கு வானம் படத்திற்கு பிறகு நிறையபட வாய்ப்புகள் வருகிறதாம். இத்தனைக்கும் வானம் படத்தில் அவருக்கு பெரியளவிலான கேரக்டர் ஏதும் இல்லை. இருந்தாலும் தான் ஏற்று நடித்த அந்த சிறிய பாத்திரத்தையும் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். தற்போது தமிழ், மலையாளம் என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வரும் சோனியாவிற்கு ஒரு ஏக்கம். அதாவது டைரக்டர்கள் பாலா, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரது படங்களில் நடிக்க வேண்டுமாம். இருவரது படங்களையும் விரும்பி பார்ப்பாராம். குறிப்பாக கவுதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மட்டும் பலமுறை பார்த்திருக்கிறாராம். அதேபோல் இந்தியில் கரன் ஜோகர் மற்றும் அனுராவ் காசியாப் ஆகியோரது படங்களிலும் நடிக்க வேண்டுமாம். அம்மணியின் ஆசை நிறைவேறுமா...?!