மிட் நைட்டில் போடப்படும் முட்டை பரோட்டா மாதிரி, தமிழ் சினிமாவின் அஜீரணத்திற்கு காரணமாக கருதப்படும் அநேக நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சேவல் படத்தில் தொடங்கி, லேட்டஸ்டாக வந்த துரோகி வரைக்கும் பாஜ்வாவின் பாச்சா எதுவும் பலிக்கவே இல்லை.
சினிமா என்னை நேசிக்காத வரைக்கும் நான் சினிமாவை நேசிக்க போவதில்லை என்று வெளிப்படையாக கூறியதுடன், கன்னா பின்னாவென்று சதை போட்டு எடை மிஷினையே திணறடித்தார் பூனம். என்னை தேடி வாய்ப்புகள் வந்தால் வாயை கட்டி வயிற்றை கட்டி உடம்பை இளைக்க வைப்பேன். இல்லையென்றால் உணவுக்கட்டுப்பாடு எதற்கு என்று விதண்டாவாதம் செய்தவர். இப்படியெல்லாம் எரிச்சலுற வைத்த பூனத்தை இப்போது பார்த்தால் அசந்தே போவீர்கள். அவ்வளவு துரம் இளைத்திருக்கிறார். எதிரி எண் 3 படத்தில் ரிப்போர்ட்டராக நடிக்கிறாராம். கோ கார்த்திகாவே இப்போதுதான் பேனாவை மூடி வைத்தார். அடுத்து பூனம் பாஜ்வா திறந்திருக்கிறார். பேனாவைதான்....