Tuesday, June 14, 2011
கலை வாழ்வில் மட்டுமல்ல, கல்யாண வாழ்விலும் அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக பிறந்திருக்கிறார் தெலுங்கு நாயகன் நாக சைதன்யா. |
மகன் செய்திருக்கும் வேலை தென்னக சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கும் போலிருக்கிறது. அழகி அனுஷ்காவோடு டூயட் ஆடுவது போல ஆளாளுக்கு கனவு கண்டு கொண்டிருக்க, அதை நிஜத்தில் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் நாக சைதன்யா. கடந்த வாரத்தில் இவருக்கும் அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்துவிட்டதாம். மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த செய்தியை நமது தமிழ் நாயகன் ஒருவர் தமுக்கடிக்காத குறையாக ஊருக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அமலா முன்னணி நடிகையாக இருக்கும் போது தான் நாகார்ஜுனா அவரை திருமணம் செய்து கொண்டார். அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார் நாக சைதன்யா. |