Tuesday, 14 June 2011
இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் ஸ்ரீதேவி கதாநாயகியாகும் மகள்.
Tuesday, June 14, 2011
1970 மற்றும் 80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இந்திப் படங்களிலும் நடித்தார். 1996-ல் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் குடியேறினார். இவருக்கு ஜான்வி, குஷி என இருமகள்கள் உள்ளனர்.
ஜான்வி வளர்ந்து விட்டபடியால் கதாநாயகியாக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு அல்லது தமிழ் படத்தில் அறிமுகம் செய்கிறார். இதற்காக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
பழைய நடிகை ராதா தனது மகள் கார்த்திகாவை “கோ” தமிழ் படத்தில் அறிமுகம் செய்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது. அவரைப் போல் ஜான்வியை தென்னிந்திய மொழிப் படங்களில் முதலில் நடிக்க வைக்க விரும்புகிறார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை அணுகி அவரது இளைய மகன் அகிலுக்கு ஜோடியாக ஜான்வியை நடிக்க வைக்கும்படி கேட்டுக் கொண்டு உள்ளார். கதை தேர்வு விறுவிறுப்பாக நடக்கிறது.