Tuesday, 14 June 2011
பிரகாஷ்ராஜ் 2-வது மனைவிக்கு நடனப்பள்ளி திறந்து வைத்தார்.
Tuesday, June 14, 2011
நடிகர் பிரகாஷ்ராஜ் முதல் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து செய்து போனிவர்மாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். போனிவர்மா இந்தி திரையுலகில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக உள்ளார். பிரகாஷ்ராஜ் தயாரித்த படங்களுக்கு அவர் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
திருமணத்துக்கு பின் இருவரும் மும்பையில் வசிக்கின்றனர். பிரகாஷ்ராஜூம் போனிவர்மாவும் மும்பையில் நடனப்பள்ளியொன்றை துவக்கி உள்ளனர். பிரகாஷ்ராஜ் இதனை திறந்து வைத்தார்.
இங்கு சினிமா டான்ஸ் சல்யா, சாசா, ரும்பா, “ஹிப் ஹாப்” லாக்கிங், பாப்பிங் போன்ற நடனங்கள் கற்றுத் தரப்படுகின்றன. திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் கோவிந்தா, விவேக் ஓபராய், நடிகை நீது சந்திரா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நடனப்பள்ளியின் கிளைகளை விரைவில் சென்னை, ஐதராபாத் நகரங்களில் திறக்கவும் திட்டமிட்டுள்ளனர்.