ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் "கோடை விடுமுறை" படத்தை கதிர் இயக்குகிறார். கோடை விடுமுறைக்கு ரஹ்மான் இசையமைப்பார் என கதிர் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார். அவருக்கு அதில் சந்தேகமில்லை. ஆனால் ரஹ்மான் இதுவரை தனது சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இந்தச் சின்ன இழுபறி காரணமாக கோடை விடுமுறை விளம்பரங்களில் இசையமைப்பாளர் பெயர் இல்லை. கதிரின் முதல் படம் இதயம் தவிர்த்து மற்றப் படங்கள் அனைத்துக்கும் இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.