எனக்கு படிப்பை விட, நடிப்புதான் முக்கியம் என்று 8ம்வகுப்பு வரை படித்திருக்கும் நாயகி ஒருவர் கூறியிருக்கிறார். அவர் பெயர் லட்சுமி மேனன். 15 வயதாகும் இவர், பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். கொச்சிதான் சொந்த ஊர். 8ம் வகுப்பு வரை படித்திருக்கும் லட்சுமி மேனன், நேரம் கிடைத்தால் படித்துக் கொள்ளலாம்; கலைச்சேவைதான் முக்கியம் என்று முடிவெடுத்ததால் நடிப்பதற்கு வந்து விட்டாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், எனக்கு படிப்பதை விட நடிப்பதில்தான் விருப்பம். என் பெற்றோரும் அதே முடிவை எடுத்ததால் இங்கே நடிக்க வந்திருக்கிறேன். இதற்கு முன் ஒரு மலையாள படத்தில் நடித்திருக்கிறேன். டைரக்டர் வினயன் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் சின்ன வேடம் என்பதால் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் அந்த படத்தால்தான் கோடம்பாக்கத்துக்கு வர முடிந்தது, என்கிறார்.